Beginner Friendly · Hands-on · Free

PHP variables explanation in tamil - linto.in

php variables in tamil, variable என்பதற்கு தமிழில் மாறி என்று அர்த்தம். தகவல்களோடு நாம் வேலை செய்யும் போது அத்தகைய தகவல்கலை சேமித்த வைப்பதற்கு வசதியான ஒரு வழி வேண்டும்.

5 min read Updated Dec 02, 2025

PHP Variables

variable என்பதற்கு தமிழில் மாறி என்று அர்த்தம். தகவல்களோடு நாம் வேலை செய்யும் போது அத்தகைய தகவல்கலை சேமித்த வைப்பதற்கு வசதியான ஒரு வழி வேண்டும். அத்தகைகய வசதியான ஒரு வழிதான் மாறிகள். மாறிகள் மதிப்புளைளக் கொண்டிருக்கும். நிரல்கள் இயங்கும் போது மாறிகள் கொண்டிருக்கும் மதிப்புகள் மாறலாம்.

Variable Declaration:

மாறிகளை உருவாக்குவதற்கு முன்பு மாறிகளுக்கு எப்படி பெயரிட வேண்டும் என்பதை பார்த்துவிடுவது அவசியமானது.

அனைத்த PHP மாறிகளும் $ குறியீட்டைக் prefix-ஆக கொண்டு தொடங்கும். இந்த $ prefix-ஐத் தொடர்ந்து வருவது ஒரு மாறி என்பதை PHP pre-processor க்கு தெரிவிக்கும்.

மாறியின் முதல் எழுத்து கட்டாயமாக ஒரு எழுத்தை கொண்டோ அல்லது _ (underscore) கொண்டுதான் தொடங்க வேண்டும்.

முதல் எழுத்தைத் தொடர்ந்த வரும் எழுத்துக்கள் எண்ணாகவோ, எழுத்தாகவோ அல்லது _ (underscore) ஆகவோ இருக்கலாம்.

மற்ற எதைக்கொண்டு மாறிக்கு பெயர் வைத்தாலும் அது பிழையாக கருதப்படும்.

Note: PHP ஒரு case sensitive scripting language ஆகையால் சிறிய எழுத்து மற்றும் பெரிய எழுத்துக்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். $myName என்பதும் $myname என்பதும் வெவ்வேறானவை. இரண்டும் ஒன்றல்ல.

Legal php variables:

$_myName

$myName

$__myName

$myVar12

Illegal php variables:

$_1myName – underscore க்கு அடுத்த எழுத்துதான் வர வேண்டும்.

$1myName – முதல் எழுத்து எழுத்தாகத்தான் இருக்க வேண்டும், எண்ணாக இருக்கக் கூடாது.

$my-Name – எண், எழுத்து, underscore ஐத் தவிர மற்ற எதையும் பயன்படுத்தக்கூடாது.

இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.