array_merge() Function in PHP

array_merge() function இங்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி தனி array-களில் உள்ள values-களை ஒன்றாக சேர்பதற்கு பயன்படுகிறது. இறுதியில் output-ஆனது ஒரே array-இல் கிடைக்கும்.

array_merge($array1,$array2,...)

Example

<?php
$first_array = array(0=>"tamil",1=>"english",2=>"maths");
$second_array = array(0=>"science",1=>"social");
$result_array = array_merge($first_array,$second_array);
print_r($result_array);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், array_merge() இங்கு முதல் array-இல் ($first_array) tamil,english,maths என்ற values-கள் உள்ளது. இரண்டாவது array-இல் science,social என்ற values-கள் உள்ளது. array_merge() என்ற function-இல் இரண்டு array-யும் argument-ஆக அனுப்பும் போது values-கள் சேர்ந்து நமக்கு ஒரே array-வாக return செய்யும். எனவே $result_array என்ற array-இல் tamil,english,maths,science,social என்ற values-கள் கிடைத்துள்ளது.

Output:

Array
(
    [0] => tamil
    [1] => english
    [2] => maths
    [3] => science
    [4] => social
)

Comments