similar_text() Function in PHP
similar_text() function இரண்டு வெவ்வேறு string களில் ஒரே மாதிரியாக உள்ள character களின் எண்ணிக்கையை கண்டறிய பயன்படுகிறது. அதேபோல் ஒரே மாதிரியாக உள்ள character களின் percentage value ஐ கண்டறிய பயன்படுகிறது.
similar_text(first_string, second_string, percent)
Example1
<?php
echo similar_text("peacock is my favourite bird","peacock");
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் similar_text() function இங்கு இரண்டு string கள் argument ஆக அனுபப்படுகிறது. இந்த function இரண்டு string களில் ஒரே மாதிரியாக உள்ள character களின் எண்ணிக்கையை கண்டறிந்து நமக்கு output ஆக தருகிறது. இங்கு "peacock" என்பது இரண்டு string-ம் ஒரே மாதிரியாக உள்ளது எனவே நமக்கு output 7 என வருகிறது.
7
Example2
<?php
similar_text("peacock is my favourite bird","peacock",$percent);
echo $percent;
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் similar_text() function இங்கு இரண்டு string argument கள் மற்றும் கூடுதுலாக $percent என்ற மூன்றாவது argument அனுபப்படுகிறது. இந்த function இரண்டு string களில் ஒரே மாதிரியாக உள்ள character களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அதன் percentage value ஐ தருகிறது. இந்த value ஆனது மூன்றாவது argument இல் store ஆகிறது. இதனை print செய்து பார்க்கும் போது நாம் output ஐ காணலாம்.
40
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments