array_intersect_uassoc() Function in PHP
array_intersect_uassoc() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும். முக்கியமாக இங்கு user defined function வழியாக comparision நடைபெறுகிறது.
array_intersect_uassoc(array1, array2, array3, user_function)
Example
<?php
function compare($data1,$data2)
{
if ($data1===$data2)
{
return 0;
}
return ($data1>$data2)?1:-1;
}
$data1=array("a"=>"java","b"=>"php","d"=>"javascript");
$data2=array("a"=>"java","c"=>"c++","d"=>"javascript");
$result=array_intersect_uassoc($data1,$data2,"compare");
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், $data1 array-வில் உள்ள key மற்றும் value a => java,d => javascript $data2 array-வில் உள்ள key மற்றும் value, a => java,d => javascript உடன் பொருந்தியுள்ளது. இங்கு compare என்ற user defined function argument-ஆக அனுபப்படுகிறது. இதன் மூலமாக இங்கு key மற்றும் value comparision நடைபெறுகிறது. இங்கு நமக்கு output முதல் array-ல் உள்ள a => java,d => javascript கிடைக்கிறது.
Array ( [a] => java [d] => javascript )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments