array_udiff() Function in PHP

array_udiff() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் value வேறு எந்த array-விழும் ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் இருந்தால், அந்த value மட்டும் நமக்கு விடையாக கிடைக்கும்.முக்கியமாக இங்கு user defined function வழியாக comparision நடைபெறுகிறது.அதேபோல் இங்கு values மட்டுமே compare செய்யும் key-ஐ compare செய்யாது.

array_udiff(array1, array2, ..., value_compare_function);

Note: array_udiff() இந்த function முதல் array-ல் உள்ள values மற்ற array-களில் உள்ள values-களுடன் compare செய்து ஒன்றோடு ஒன்று பொருந்தாமல் இருக்கும் values-கள் array-வாக return செய்யும்.இங்கு array மற்றும் callback function போன்றவை argument-களாக அனுபப்படுகிறது.

Example

<?php
function compare($a, $b){

    if($a == $b){
        return 0;
    }
    return ($a < $b) ? -1 : 1;
}

$animals1 = array("dog", "kitten", "cat", "horse", "puppy");
$animals2 = array("kitten", "puppy", "dog", "cherry", "mouse");

$result = array_udiff($animals1, $animals2, "compare");
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், $animals array-வில் உள்ள cat,horse என்ற values $animlas2 array-வில் உள்ள values- களுடன் பொருந்தாமல் உள்ளது. இங்கு compare என்ற user defined function மூலமாக values comaparision நடைபெறுகிறது.இங்கு நமக்கு output முதல் array-ல் உள்ள cat,horse என்ற values கிடைக்கிறது.

Output:

Array 
( 
[2] => cat 
[3] => horse 
)

Comments