ltrim() Function in PHP

ltrim() function ஒரு string-ன் ஆரம்பத்தில் உள்ள whitespaces மற்றும் மற்ற characters-ஐ remove செய்வதற்கு பயன்படுகிறது.

ltrim(string, strip_characters)

Note: ltrim() function-ல் இரண்டு arugument-கள் அனுப்பப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் remove செய்யப்பட வேண்டிய characters. இரண்டாவது arugument கொடுக்கப்படவில்லை என்றால் string-இன் ஆரம்பத்தில் பின்வருவனவற்றை (" " - an ordinary space, "\t" - a tab, "\n" - a new line, "\r" - a carriage return, "\0" - the NULL-byte, "\v" - a vertical tab) மட்டும் remove செய்யும்.

Example1

<?php
$str = "   lion is my favourite animal";
echo ltrim($str);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $str என்ற variable-இல் " lion is my favourite animal" இந்த string-இன் ஆரம்பத்தில் whitespaces உள்ளது. ltrim function-இல் இதனை arugument-ஆக அனுப்பும் போது string-ன் ஆரம்பத்தில் உள்ள whitespaces remove செய்கிறது.

Output:

lion is my favourite animal

Example2

<?php
$input = "   ++--please visit linto.in website to learn programming in tamil";
echo ltrim($input," ++--");  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் string-இன் ஆரம்பத்தில் whitespaces மற்றும் ++-- போன்ற character சேர்ந்து வந்துள்ளது. இங்கு முக்கியமாக இரண்டாவது argument-இல் ( ++--) அனுபப்படுகிறது. எனவே இங்கு whitespaces மற்றும் ++-- போன்ற character-கள் remove செய்து please visit linto.in website to learn programming in tamil என்ற string மட்டும் output-ஆக கிடைக்கிறது.

Output:

please visit linto.in website to learn programming in tamil

Comments