strnatcmp() Function in PHP

strnatcmp() function இங்கு இரண்டு string களை compare செய்ய பயன்படுகிறது. இந்த function "natural order" algorithm ஐ பயன்படுத்தி இரண்டு string களை compare செய்கிறது. முக்கியமாக இந்த function case sensitive முறையை பின்பற்றுகிறது.

strnatcmp($string1, $string2);

Note: strnatcmp() function-இல் compare செய்யப்பட வேண்டிய இரண்டு string கள் argument ஆக அனுபப்படுகிறது.
இங்கு இரண்டு string கள் சமமாக இருந்தால் [ 0 ] என return செய்யும்.
string1, string2 ஐ விட less ஆக இருந்தால் [< 0] என return செய்யும்.
string1, string2 ஐ விட greater ஆக இருந்தால் [> 0] என return செய்யும்.

Example1

<?php
$input1 = "Slow And Steady Wins the race";
$input2 = "SLOW AND STEADY WINS THE RACE";
echo strnatcmp($input1,$input2);   
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "Slow And Steady Wins the race" string மற்றும் $input2 என்ற variable-இல் "SLOW AND STEADY WINS THE RACE" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strnatcmp() function இல் srting-களை argument ஆக அனுப்பும்போது $input1 மற்றும் $input2 variable உள்ள இரண்டு string-ம் சமமாக இல்லை, ஏனெனில் இந்த function case-sensitive ஐ பின்பற்றுகிறது. இங்கு uppercase மற்றும் lowercase letters இரண்டும் வேறுவேறாக எடுத்துகொள்ளபடும். இந்த Example1 இல் string1, string2 ஐ விட greater ஆக உள்ளது எனவே output 1 என கிடைக்கிறது.

Output:

1

Example2

<?php
$data1 = "birds are beautiful";
$data2 = "birds are beautiful";
echo strnatcmp($data1,$data2);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "birds are beautiful" string மற்றும் $data2 என்ற variable-இல் "birds are beautiful" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strnatcmp() function இல் string ஐ argument ஆக அனுப்பும்போது $data1 மற்றும் $data2 என்ற variable களில் உள்ள இரண்டு string களும் சமமாக உள்ளது எனவே output "௦" என கிடைக்கிறது.

Output:

0

Comments