array_unique() Function in PHP

array_unique() function இங்கு ஒரு array-ல் உள்ள duplicate values-களை remove செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு array-ல் ஓரே மாதிரியாக உள்ள values-களில் முதலில் உள்ள key மற்றும் values-களை வைத்து கொள்ளும். output-ஆனது புதிய array-ஆக கிடைக்கும்.

array_unique(array, sort_flags);

Note: array_unique() இங்கு syntax-ல் முதல் argument-ஆக ஒரு array-ஆனது அனுபப்படுகிறது, இரண்டாவது argument-ஆக sort_flags அனுபப்படுகிறது இது optional ஆகும் இது array-ல் உள்ள values எதை வைத்து compare செய்யபடுகிறது என்பதை குறிக்கிறது. SORT_STRING - Compare items as strings. Default value. SORT_NUMERIC - Compare items numerically. SORT_REGULAR - Compare items normally (don't change types). SORT_LOCALE_STRING - Compare items as strings, based on the current locale.

Example

<?php
$number = array(1, 2, 4, 5, 2, 5, 7, 2, 10);
$output = array_unique($number);
print_r($output);
?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_unique() function-ல் $number என்ற array-ஆனது argument ஆக அனுபப்படுகிறது. இங்கு 2,5 போன்ற values-கள் மீண்டும் மீண்டும் வந்துள்ளது எனவே array_unique function-ஆனது 2,5 ஒருமுறை மட்டும் வைத்து கொண்டு மற்ற duplicate values-களை remove செய்துவிட்டு 1,2,4,5,7,10 என்ற values-கள் மட்டும் நமக்கு output -ஆக கிடைக்கிறது.

Output:

Array
(
    [0] => 1
    [1] => 2
    [2] => 4
    [3] => 5
    [6] => 7
    [8] => 10
)

Comments