array_intersect_key() Function in PHP

array_intersect_key() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த key நமக்கு விடையாக கிடைக்கும்.

array_intersect_key(array1, array2, array3, ...)

Note: array_intersect_key() இந்த function முதல் array-ல் உள்ள key மற்ற array-களில் உள்ள key-களுடன் compare செய்து பொதுவாக ஒரே மாதிரியான key-கள் array-வாக return செய்யும்.array_intersect_key() function array-ல் உள்ள key-ஐ மட்டும் ஒரே மாதிரியாக உள்ளதா என compare செய்யும் values-ஐ compare செய்யாது.

Example

<?php
$vegetables1 = array("a"=>"Potato","b"=>"Tomato","c"=>"Brinjal","d"=>"Cabbage");
$vegetables2 = array("a"=>"Radish","b"=>"Onion","d" =>"Cauliflower");
print_r(array_intersect_key($vegetables1,$vegetables2));

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$vegetables1 array-வில் உள்ள key a,b,d $vegetables2 array-வில் உள்ள a,b,d என்ற key-யுடன் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $vegetables1 array-வில் உள்ள "c" என்ற key-மட்டும் விடுத்து,$vegetables1 என்ற array-ல் உள்ள a => Potato, b => Tomato மற்றும் d => Cabbage இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [a] => Potato
    [b] => Tomato
    [d] => Cabbage
)

Comments