PHP Script உருவாக்குதல்

இதற்கு முந்தைய பகுதிகளில் PHP எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தோம். இந்த பகுதியில் PHP Script – ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம். PHP நிரலை எழுத தொடங்குவதற்கு முன் PHP நிரலை எழு என்னென்னெவெல்லாம் தேவை என்று பார்ப்போம்.

PHP நிரல் எழுத தேவையானவைகள்:

  1. Web Server
  2. PHP
  3. Browser
  4. Text Editor
  5. Database

Web Server, PHP, Database ஆகியவைகளை எப்படி நிறுவுவது என்பதைப் பற்றி தெரிந்த கொள்ள PHP யின் அதிகார்வபூர்வ தளமான Website-க்குச் செல்லலாம். Click here

Browser மற்றும் Editor ஆகிய இரண்டும் அனைத்து இயங்குதளங்களிலும் இயல்பாகவே நிறுவப்பட்டு இருக்கும். வேண்டுமானால் நீங்கள் கூடுதலாக Mozilla Firefox, Google Chrome உலாவிகளை நிறுவிக்கொள்ளுங்கள்.

Comments