explode() Function in PHP
explode() function நாம் கொடுக்கும் string value-ஐ குறிப்பிட்ட seperator-ஐ பயன்படுத்தி தனித்தனி string-ஆக பிரித்து ஒரு array-வாக return செய்கிறது.
explode(separator, OriginalString, NoOfElements)
Example1
<?php
$input = "parallel codes tamil";
$result = explode(" ", $input);
print_r($result);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "parallel codes tamil" srting-ஆனது கொடுகப்பட்டுள்ளது. இங்கு explode function-இல் space seperator argument-ஆக பயன்படுத்தபட்டுள்ளது. எனவே string-இல் கொடுகப்பட்டுள்ள space-க்கு ஏற்றவாறு தனித்தனி string-ஆக பிரித்து ஒரு array-வாக return செய்கிறது. output-ஐ கவனிக்கவும் [0] => parallel [1] => codes [2] => tamil என கிடைக்கிறது.
Array ( [0] => parallel [1] => codes [2] => tamil )
Example2
<?php
$input = "php string functions tamil";
$result = explode(" ", $input,2);
print_r($result);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "php string functions tamil" srting-ஆனது கொடுகப்பட்டுள்ளது. இங்கு explode function-இல் space seperator மற்றும் 2 என்ற limit argument-ஆக பயன்படுத்தபட்டுள்ளது. எனவே string-இல் கொடுகப்பட்டுள்ள space-ஐ 2 என limit set செய்யப்பட்டுதால் இரண்டு string-ஆக மாற்றி அதனை ஒரு array-வாக return செய்கிறது. output-ஐ கவனிக்கவும் [0] => php [1] => string functions tamil என கிடைக்கிறது.
Array ( [0] => php [1] => string functions tamil )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments