array_replace() Function in PHP
array_replace() function இங்கு ஒரு array-ல் உள்ள values-களை மற்றொரு array-ல் உள்ள values-களால் key/index-ஐ பொருத்து replace செய்வதற்கு பயன்படுகிறது.
array_replace( array1, array2, array3, ...)
Note: array_replace() இங்கு ஒன்றிற்கு மேற்பட்ட array-களை argument-ஆக கொடுக்கலாம்.
Example
<?php
$data1 = array("animal"=>"lion","bird"=>"peacock","pet"=>"cow");
$data2 = array("pet"=>"dog");
$result = array_replace($data1,$data2);
print_r($result);
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_replace() இங்கு $data1 மற்றும் $data2 என்ற array-கள் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. $data1 என்ற முதல் array-ல் "pet"=>"cow" என்ற key மற்றும் value-கள் உள்ளது. $data2 என்ற இரண்டாவது array-ல் "pet"=>"dog" என்ற key மற்றும் value-கள் உள்ளது. இந்த இரண்டு array-களை array_replace()-ல் argument-ஆக அனுப்பும் போது முதல் array-ல் உள்ள "cow" என்ற value "dog" என்று replace ஆகிறது.
Output:
Array ( [animal] => lion [bird] => peacock [pet] => dog )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments