array_merge_recursive() Function in PHP
array_merge_recursive() function இங்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட array-களை ஒன்றாக சேர்த்து ஒரே array-வாக return செய்யும். இவ்வாறு ஒரே array-வாக merge ஆகும் போது இங்கு வெவ்வேறு array-களில் ஒரே key இருந்தால் அந்த array-இல் புதிய array உருவாகி அதில் values-களை வைத்து கொள்ளும்.
array_merge_recursive($array1,$array2,$array3,...);
Note: array_merge() மற்றும் array_merge_recursive() function-களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்னவென்றால் ,
array_merge இங்கு வெவ்வேறு array-களில் ஒரே key இருந்தால் இறுதியாக வரும் key-இல் உள்ள value-ஐ எடுத்து கொள்ளும். ஆனால் array_merge_recursive
இங்கு வெவ்வேறு array-களில் ஒரே key இருந்தால் அந்த array-இல் புதிய array உருவாகி அதில் values-களை வைத்து கொள்ளும்.
Example
<?php
$num1 = array("a"=>"one","b"=>"two");
$num2 = array("c"=>"three","b"=>"four");
print_r(array_merge_recursive($num1,$num2));
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_merge_recursive() இங்கு $num1 மற்றும் $num2 என்ற இரண்டு array-களிலும் "b" என்ற key பயன்படுத்தபட்டுள்ளது, இந்த array variable-ஐ array_merge_recursive function-இல் அனுப்பும் போது "b" என்ற key-இல் ஒரு புதிய array உருவாகி அதில் values-களை வைத்து கொள்ளும்.
Output:
Array ( [a] => one [b] => Array ( [0] => two [1] => four ) [c] => three )
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments