array_uintersect_uassoc() Function in PHP

array_uintersect_uassoc() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும்.முக்கியமாக இங்கு இரண்டு user defined function வழியாக comparision நடைபெறுகிறது.

array_uintersect_uassoc(array1, array2, array3, ..., func_key, func_value);

Note: array_uintersect_uassoc() இந்த function முதல் array-ல் உள்ள key மற்றும் value மற்ற array-களில் உள்ள key மற்றும் value-களுடன் compare செய்து பொதுவாக ஒரே மாதிரியான key மற்றும் value-கள் array-வாக return செய்யும். func_key என்ற argument array-ல் உள்ள key-களை compare செய்யும். அதேபோல் func_value என்ற argument array-ல் உள்ள values-களை compare செய்யும்.

Example

<?php
function function_key($a,$b)
{
if ($a===$b)
  {
  return 0;
  }
  return ($a>$b)?1:-1;
}
function function_value($a,$b)
{
if ($a===$b)
  {
  return 0;
  }
  return ($a>$b)?1:-1;
}
$data1=array("a"=>"php","b"=>"php","d"=>"python");
$data2=array("a"=>"php","c"=>"c++","d"=>"python");
$result=array_uintersect_uassoc($data1,$data2,"function_key","function_value");
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், $data1 array-வில் உள்ள key மற்றும் value a => php,d => python $data2 array-வில் உள்ள key மற்றும் value, a => php,d => python உடன் பொருந்தியுள்ளது. இங்கு key comparision function_key என்ற user defined function மூலமாகவும், values comparision function_value என்ற user defined function மூலமாகவும் நடைபெறுகிறது. இதன் மூலமாக இங்கு key மற்றும் value comparision நடைபெறுகிறது. இங்கு நமக்கு output முதல் array-ல் உள்ள a => php,d => python கிடைக்கிறது.

Output:

Array
(
    [a] => php
    [d] => python
)

Comments