lcfirst() Function in PHP

lcfirst() function string-இல் உள்ள முதல் character-ஐ lowercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது.

lcfirst ( $string )

Note: lcfirst() function இங்கு string மட்டும் argument-ஆக அனுப்பப்படுகிறது. இந்த function நாம் அனுப்பும் string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் lowercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. முக்கியமாக இங்கு numbers மற்றும் special character-கள் இருந்தால் அவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

Example1

<?php
$input = "PROGRAMMING IN TAMIL";
echo lcfirst($input);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "PROGRAMMING IN TAMIL" என்ற string அனுப்பப்பட்டுள்ளது. இந்த string அனைத்தும் uppercase characters-இல் உள்ளது lcfirst என்ற function-இல் அனுப்பும் போது string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் lowercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. எனவே output-ஆனது pROGRAMMING IN TAMIL என மாறுகிறது. இங்கு முதல் character small letter p-ஆக மாறிவிட்டது.

Output:

pROGRAMMING IN TAMIL

Example2

<?php
$data = "SUBSCRIBE PARALLEL CODES TO LEARN PROGRAMMING IN TAMIL";
echo lcfirst($data);   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "SUBSCRIBE PARALLEL CODES TO LEARN PROGRAMMING IN TAMIL" என்ற string அனுப்பப்பட்டுள்ளது. இந்த string அனைத்தும் uppercase characters-இல் உள்ளது lcfirst என்ற function-இல் அனுப்பும் போது string-இல் உள்ள முதல் character-ஐ மட்டும் lowercase-ஆக மாற்றுவதற்கு பயன்படுகிறது. எனவே output-ஆனது sUBSCRIBE PARALLEL CODES TO LEARN PROGRAMMING IN TAMIL என மாறுகிறது.இங்கு முதல் character small letter s-ஆக மாறிவிட்டது.

Output:

sUBSCRIBE PARALLEL CODES TO LEARN PROGRAMMING IN TAMIL

Comments