strncasecmp() Function in PHP

strncasecmp() function இங்கு நாம் கொடுக்கும் இரண்டு string களுக்கு இடையேயான comparision நாம் length ஆக கொடுக்கும் first n character களை பொருத்து நடைபெறுகிறது.

strncasecmp( $string1, $string2, $length)

Note: strncasecmp() function-இல் மூன்று argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string1,string2 மற்றும் length ஆகியன. நாம் கொடுக்கும் first n character களை பொருத்து இரண்டு string களுக்கு இடையே comparision நடைபெறுகிறது.
இங்கு இரண்டு string-ம் சமமாக இருந்தால் strncasecmp() function zero('0') என return செய்யும்.
$str1 less ஆக இருந்தால் negative values மற்றும் $str1 greater ஆக இருந்தால் positive values return செய்யும்.
முக்கியமாக இந்த function case-insensitive முறையை பின்பற்றுகிறது, அதாவது uppercase மற்றும் lowercase letter இரண்டையும் ஒரே மாதிரியாக எடுத்துகொள்ளும். strncasecmp() ஒரு binary-safe function ஆகும்.

Example1

<?php
$input1 = "I like her";
$input2 = "I LIKE HER TOO";
echo strncasecmp($input1,$input2,10);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "I like her" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "I LIKE HER TOO" என்ற string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strncasecmp function இல் srting-களை argument ஆக அனுபப்படுகிறது மற்றும் first n characters 10 என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முதல் position இருந்து 10 வது position வரை உள்ள string களை compare செய்து output ஆக கொடுக்கிறது. இந்த function case-insensitive முறையை பின்பற்றுகிறது, அதாவது uppercase மற்றும் lowercase letter இரண்டையும் ஒரே மாதிரியாக எடுத்துகொள்ளும் அதேபோல் இங்கு இரண்டு string சமமாக உள்ளது output 0 என கிடைக்கிறது.

Output:

0

Example2

<?php
$data1 = "I watch movies on my iPad";
 $data2 = "I didn't watch movies";
 echo strncasecmp($data1,$data2,20);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "I watch movies on my iPad" என்ற string மற்றும் $data2 என்ற variable-இல் "I didn't watch movies" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. strncasecmp function இல் srting-களை argument ஆக அனுபப்படுகிறது மற்றும் first n characters 20 என கொடுக்கப்பட்டுள்ளது. எனவே முதல் position இருந்து 20 வது position வரை உள்ள string களை compare செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு முதல் string இரண்டாவது string ஐ விட அதிகமாக உள்ளது எனவே output positive values அதாவது 19 என கிடைக்கிறது.

Output:

19

Comments