strpbrk() Function in PHP

strpbrk() function இங்கு string மற்றும் character list argument ஆக அனுபப்படுகிறது, இரண்டாவது string இல் உள்ள character முதல் string இல் எங்கிருந்து ஆரம்பம் ஆகிறது என்பதை கண்டறிந்து அதிலிருந்து முதல் string இல் உள்ள அனைத்து character-ம் output ஆக கொடுக்கிறது.

strpbrk(string,charlist)

Note: strpbrk() function இங்கு இரண்டு argument அனுபப்படுகிறது. அவைகள் முறையே string மற்றும் character list argument-ஆக அனுபப்படுகிறது. முக்கியமாக இந்த function case-sensitive முறையை பின்பற்றுகிறது.இங்கு uppercase மற்றும் lowercase letters இரண்டும் வேறுவேறாக எடுத்துகொள்ளபடும். இந்த function ஆனது string இல் உள்ள character ஐ search செய்து எடுபதற்கு பயன்படுகிறது.

Example1

<?php
$input = "Love yourself first and everything else falls into place";
echo strpbrk($input,"y");    
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Love yourself first and everything else falls into place" என்ற string உள்ளது. strpbrk() என்ற function-இல் input string மற்றும் search character "y" ஆகியன அடுத்தடுத்த argument-ஆக அனுபப்படுகிறது. strpbrk() function "y" என்ற character input string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string-யும் output ஆக கொடுக்கிறது.

Output:

yourself first and everything else falls into place

Example2

<?php
$data = "Keep your Face always toward the sunshine";
echo strpbrk($data,"F");   
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Keep your Face always toward the sunshine" என்ற string உள்ளது. strpbrk() என்ற function-இல் data string மற்றும் search character "F" ஆகியன அடுத்தடுத்த argument-ஆக அனுபப்படுகிறது. strpbrk() function "F" என்ற character data string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string-யும் output ஆக கொடுக்கிறது. இங்கு நமக்கு output Face always toward the sunshine என கிடைக்கிறது.

Output:

Face always toward the sunshine

Comments