array_fill() Function in PHP

array_fill() என்ற function ஒரு array-வில் ஒரே மாதிரியான values-ஐ வெவ்வேறு key-க்களுக்கு நிரப்ப(fill) இந்த function பயன்படுத்தபடுகிறது.

array_fill(starting_index, num_of_elements, array_values )

Example

<?php
$data = array_fill(2,5,"linto.in");
print_r($data);

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், array_fill(2,5,"linto.in") இங்கு மூன்று argument கொடுக்கப்பட்டுள்ளது. 1st argument 2 என்பது start index அதாவது key எங்கிருந்து துவங்குகிறது என்பதை குறிக்கும். 2nd argument 5 என்பது எத்தனை key-கள் வரை வேண்டும் என்பதை குறிக்கும். அதாவது key 2-ல் ஆரம்பித்து மொத்தமாக ஐந்து 2,3,4,5,6. 3rd arugument "linto.in". இது கொடுக்கப்பட்டுள ஒவ்வொரு key-க்களுக்கும் set செய்யவேண்டிய value ஆகும். இங்கு array_fill() function மூலம் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான values களை உருவாக்க முடியும். ஆகையால் "linto.in" என்ற ஒரு value அனைத்து key களுக்கும் set செய்யப்பட்டுள்ளது.

Output:
Array
(
    [2] => "linto.in"
    [3] => "linto.in"
    [4] => "linto.in"
    [5] => "linto.in"
    [6] => "linto.in"
)

Comments