array_intersect_assoc() Function in PHP

array_intersect_assoc() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key மற்றும் value வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த key மற்றும் value நமக்கு விடையாக கிடைக்கும்.

array_intersect_assoc(array1, array2, array3, ...)

Note: array_intersect_assoc() இந்த function முதல் array-ல் உள்ள key மற்றும் value மற்ற array-களில் உள்ள key மற்றும் value-களுடன் compare செய்து பொதுவாக ஒரே மாதிரியான key மற்றும் value-கள் array-வாக return செய்யும்.array_intersect_assoc() function array-ல் உள்ள key மற்றும் value-ஐ ஒரே மாதிரியாக உள்ளதா என compare செய்யும்.

Example

<?php
$vegetables1 = array("a"=>"Potato","b"=>"Tomato","c"=>"Brinjal","d"=>"Cabbage");
$vegetables2 = array("a"=>"Potato","b"=>"Onion","d" =>"Cabbage");
print_r(array_intersect_assoc($vegetables1,$vegetables2));

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$vegetables1 array-வில் உள்ள key மற்றும் value a => Potato,d => Cabbage, $vegetables2 array-வில் உள்ள key மற்றும் value a => Potato,d => Cabbage உடன் பொருந்தியுள்ளது. ஆகையால் நமக்கு $vegetables1 array-வில் உள்ள b => Tomato,c => Brinjal என்ற key மற்றும் value-மட்டும் விடுத்து,$vegetables1 என்ற array-ல் உள்ள a => Potato,d => Cabbage இவை மட்டும் நமக்கு result-ஆக கிடைத்துள்ளது.

Output:
Array
(
    [a] => Potato
    [d] => Cabbage
)

Comments