substr() Function in PHP

substr() function string இன் குறிப்பிட்ட பகுதியை return செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு length ஆனது argument ஆக அனுபப்படுகிறது.

substr(string, start, length)

Note: substr() function மூன்று argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string,start மற்றும் length. இங்கு start மற்றும் length values கொடுக்கும் போது அதனை பொருத்து ஒரு குறிப்பிட்ட substr ஐ நமக்கு output ஆக கொடுக்கிறது.

Example1

<?php
$input = "Opportunities don't happen, you create them";
echo substr($input, "14");  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "Opportunities don't happen, you create them" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இரண்டாவது argument ஆக starting length "14" என கொடுகப்பட்டுள்ளது, எனவே don't happen, you create them என்ற position இல் இருந்து ஆரம்பமாகிறது. output ஐ கவனிக்கவும்.

Output:

don't happen, you create them

Example2

<?php
$data = "Great minds discuss ideas";
echo substr($data,10,20);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் "Great minds discuss ideas" என்ற string argument-ஆக அனுப்பப்பட்டுள்ளது. இங்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது argument ஆக starting,ending length கொடுகப்பட்டுள்ளது, எனவே அதனை பொருத்து "s discuss ideas" என்ற string ஆனது output ஆக கிடைக்கிறது.

Output:

s discuss ideas

Comments