array_walk() Function in PHP
array_walk() function இங்கு ஒரு array-ல் உள்ள ஒவ்வொரு element-ஐ தனித்தனியாக எடுத்து array_walk() function-இல் கொடுக்கபட்டுள்ள user_defined function- க்கு parameter-ஆக அனுப்புகிறது. இங்கு array-இல் உள்ள தனித்தனி element-களின் key மற்றும் values-கள் நமக்கு ஒன்றன்பின் ஒன்றாக கிடைக்கிறது.
array_walk(array,myfunction,somedata)
Note: array_walk() இங்கு syntax-ல் முதல் argument ஒரு array-ஆக இருக்கும், 2-வது argument callback functionஅல்லது user_defined function ஆக இருக்கும். 3-வது argument நாம் கொடுக்கும் simple data இது optional ஆகும்.
Example
<?php
function fruits($value, $key, $data)
{
echo "$key $data $value"."
";
}
$names = ['orange', 'banana', 'mango', 'apple', 'grapes'];
array_walk($names, "fruits", "has the value");
?>
மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_walk() function-ல் $names,fruits என்ற user_defined function மற்றும் "has the value" என்ற data-வை argument-ஆக அனுப்புகிறோம். fruits என்ற function-ல் $value, $key, $data போன்றவை parameter-களாக பெறப்படுகிறது. இதன் மூலம் array-ல் உள்ள element-கள்(key மற்றும் values) நமக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இது foreach போன்று செயல்படும்.
Output:
0 has the value orange 1 has the value banana 2 has the value mango 3 has the value apple 4 has the value grapes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments