stristr() Function in PHP
stristr() function இங்கு நாம் இரண்டு string ஐ argument ஆக அனுப்புகிறோம், அனுப்பிய string அல்லது character ஆனது மற்றொரு string இல் எங்கிருந்து ஆரம்பமாகிறது என்பதை கண்டறிய பயன்படுகிறது. இந்த first occurrence string இல் இருந்து அடுத்தடுத்த string ஐ output ஆக கொடுக்கிறது. இந்த function strstr() போல செயல்படும் ஆனால் இது case insensitive முறையை பின்பற்றுகிறது.
stristr(string,search,before_search)
Example1
<?php
$input1 = "All our dreams can come true if we have the courage to pursue them";
$input2 = "we";
echo stristr($input1,$input2);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input1 என்ற variable-இல் "All our dreams can come true if we have the courage to pursue them" என்ற string மற்றும் $input2 என்ற variable-இல் "we" string -ஆனது கொடுகப்பட்டுள்ளது. stristr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "we" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதிலிருந்து அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது. இங்கு output "we have the courage to pursue them" என கிடைக்கிறது.
we have the courage to pursue them
Example2
<?php
$data1 = "Happiness is not something readymade It comes from your own actions";
$data2 = "It";
echo stristr($data1,$data2,true);
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 என்ற variable-இல் "Happiness is not something readymade It comes from your own actions" என்ற string மற்றும் $data2 என்ற variable-இல் "It" string மற்றும் மூன்றாவது argument true -ஆனது கொடுகப்பட்டுள்ளது. stristr() function இல் srting ஐ argument ஆக அனுப்பும்போது $input1 string இல் "It" என்ற string எங்கிருந்து ஆரம்பமாகிறது என கண்டறிந்து அதற்கு முன்னால் உள்ள அனைத்து string- யும் output ஆக கொடுக்கிறது.இங்கு output "Happiness is not something readymade" என கிடைக்கிறது.
Happiness is not something readymade
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments