array_filter() Function in PHP

array_filter() function ஒரு array-ல் values-ஐ நமக்கு தேவையான முறையில் filter செய்து எடுப்பதற்கு பயன்படுகிறது.

array_filter(array,callback,flag)

Note: array_filter() இங்கு ஒரு callback function மூலமாக array-ல் உள்ள elements filter செய்யப்படுகிறது. flag-optional.

Example

<?php
$input = array("red","green","blue","black");
$result = array_filter($input,function($colors){
//return colors whose name is more than 4 characters
  if(strlen($colors) > 4){
    return $colors;
  }

});
print_r($result);

?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_filter() இங்கு இரண்டு argument கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள $input என்ற variable-ல் red,green,blue,black என்ற values உள்ளது. இதனை array_filter என்ற function-ல் முதல் argument-ஆக அனுப்புகிறோம்.இங்கு முக்கியமாக இரண்டாவது argument-ஆன callback function array-ல் உள்ள values-ஐ filter செய்ய பயன்படுகிறது. இங்கு 4 எழுத்துக்களுக்கு அதிகமாக உள்ள வார்த்தைகள் green,black நமக்கு output-ஆக கிடைக்கிறது.

Output:
Array
(
    [1] => green
    [3] => black
)

Comments