print() Function in PHP
print() function மிகவும் முக்கியமான function இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட string-ஐ print செய்வதற்கு பயன்படுகிறது.
print($string)
Note: print() function-இல் நாம் print செய்யப்பட வேண்டிய srting argument-ஆக அனுபப்படுகிறது. அதேபோல் double quotes("")-இல் கொடுக்கும் string-ஐ யும் இந்த function print செய்கிறது.
Example1
<?php
$input = "parallel codes";
print($input);
?>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "parallel codes" srting-ஆனது கொடுகப்பட்டுள்ளது. string-ஐ print function-இல் argument-ஆக அனுப்பும் போது string-ஐ print செய்து browser-இல் output-ஆக காட்டுகிறது.
Output:
parallel codes
Example2
<?php
$data1 = "Learn Programming in tamil";
$data2 = "kindly visit linto.in website";
print $data1." ".$data2;
?>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $data1 மற்றும் $data2-இல் குறிப்பிட்ட string values-கள் கொடுகப்பட்டுள்ளது. இங்கு print இந்த இரண்டு variable-ஐ print செய்து output-ஆக காட்டுகிறது Learn Programming in tamil kindly visit linto.in website என output கிடைக்கிறது.
Output:
Learn Programming in tamil kindly visit linto.in website
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments