substr_replace() Function in PHP

substr_replace() function நாம் கொடுக்கும் string இல் குறிப்பிட்ட text ஐ replace செய்கிறது.

substr_replace(string, replacement, start, length)

Note: substr_replace() function நான்கு argument கள் அனுபப்படுகிறது. அவைகள் முறையே string,replacement,start மற்றும் length. முதல் argument sring மற்றும் இரண்டாவதாக replacement text argument ஆக அனுபப்படுகிறது. இங்கு மூன்றாவதாக அனுப்பப்படும் start value ஐ பொருத்து replacement text ஆனது string இல் குறிப்பிட்ட இடத்தில் replace ஆகிறது. start values positive number ஆக இருந்தால் replacement ஆனது குறிப்பிட்ட position இல் start ஆகிறது, negative number ஆக இருந்தால் string இன் இறுதியில் இருந்து ஆரம்பித்து குறிப்பிட்ட position இல் text replace ஆகிறது, மாறாக 0 என இருந்தால் முதல் position இல் replacement ஆகிறது.

Example1

<?php
$data = " learn programming in tamil";
echo substr_replace($data,"Linto.in",0,0);  
?>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் $data என்ற variable-இல் " learn programming in tamil" என்ற string உள்ளது. substr_replace() function $data variable இல் உள்ள string மற்றும் replacement text ஆகியவை argument ஆக அனுபப்படுகிறது. இங்கு position value மற்றும் length இரண்டும் 0 என கொடுகபட்டுள்ளது. இங்கு string இல் starting position இல் replacement text இணைகிறது எனவே Linto.in learn programming in tamil என கிடைக்கிறது.

Output:

Linto.in learn programming in tamil

Example2

<?php
$input = "parallel codes";
echo substr_replace($input,"tamil",16);  
?>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் $input என்ற variable-இல் "parallel codes" என்ற string உள்ளது. substr_replace() function $input variable இல் உள்ள string மற்றும் replacement text ஆகியவை argument ஆக அனுபப்படுகிறது. இங்கு position value 16 என கொடுகபட்டுள்ளது. இங்கு input string இல் 16 position இல் replacement text இணைகிறது எனவே parallel codestamil என கிடைக்கிறது.

Output:

parallel codestamil

Comments