array_key_exists() Function in PHP

array_key_exists() function இங்கு நாம் கொடுக்கும் key-ஆனது array-இல் உள்ளதா என தெரிந்து கொள்ள பயன்படுகிறது. key-ஆனது இருந்தால் "true" என return செய்யும். key-ஆனது இல்லை என்றால் "false" என return செய்யும்.

array_key_exists(key, array)

Note: array_key_exists() function index array மற்றும் associative array என இரண்டிலும் வேலை செய்யும்.

Example

<?php
$subject = array("Bread"=>"1","Cheese"=>"2","Chips"=>"3","Noodles"=>"4","biscuits"=>"5");
$result = array_key_exists("Noodles",$subject);
if($result){
    echo "array key exists";
}else{
    echo "key not exists";
}
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும், array_key_exists() இங்கு $subject என்ற array variable-இல் key மற்றும் values-கள் உள்ளது. இங்கு array_key_exists() function நாம் கொடுக்கும் key-ஆனது array-இல் உள்ள key-களில் இருந்தால் மட்டும் நமக்கு "true" என return செய்யும். இங்கு Noodles என்ற value-ஆனது array-இல் உள்ளது எனவே நமக்கு "true" என return ஆகும். எனவே if condition-இல் உள்ள array key exists என்ற echo comment நமக்கு print-ஆகி உள்ளது.

Output:

array key exists

Comments