PHP variable வகைகள்:

இந்த பகுதியில் Integer, String, Float, Boolean மாறி வகைகளை காண இருக்கிறோம். Array, Object பின்வரும் பகுதியில் விரிவாக காணலாம்.

Integer Variable Type:

முழுஎண் மாறிகள் -2147483648 லிருந்து 2147483647 வரையில் உள்ள முழு எண்களை கொண்டிருக்கும். எதிர்முழு எண்கள் கழித்தல் (-) குறியை எண்ணிற்கு முன்னதாக கொண்டிருக்கும். மேற்காணும் மதிப்புகளை தாண்டும் போது இயல்பாகவே அத மிதவை (Float Point) வகைக்கு மாற்றப்படும்.

<?php
$mobilePrice = 13000;
$myNegative = -13457231;
echo “Mobile Price : $mobilePrice”;
echo “
”; echo “Negative Number : $myNegative”; ?>

Float Variable Type:

தசம எண்களே மிதவை எண்கள். உதாரணமாக 1.067, 0.25, 423454567098, 84664435.9576 கீழ்காணும் நிரலை பாருங்கள்.

<?php
$mobilePrice = 13000.3453453;
$myNegative = -13457231.3345354;
echo “Mobile Price : $mobilePrice”;
echo “
”; echo “Negative Number : $myNegative”; ?>

Boolean Variable Type:

பூலியன் வகை மாறிகள் true அல்லது false ஆகிய இரண்டு மதிப்புகளை மட்டும் ண்டிருக்கும். Flow control and Looping இல் பூலியன் வகை மாறிகளைப் பற்றி விரிவாக காண்போம். குறிப்பாக if -ஐப் பற்றி பார்க்கும் போது காணலாம். வெளிப்படையாக நாம் true or false என்று சொன்னாலும். PHP நிரலுக்குள் அது 0 or 1 என்றுதான் எடுத்தக்கொள்ளும்.

<?php
$myName = “Stallman”;
echo isset($myName);
?>

Comments