array_intersect_ukey() Function in PHP

array_intersect_ukey() என்பது ஒரு array-வை எடுத்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேறு array-க்களோடு compare செய்யும்போது முதல் array-வில் உள்ள ஒரு element-ன் key வேறு எந்த array-விழும் பொருந்தி இருந்தால், அந்த முதல் array-ல் உள்ள key மற்றும் values நமக்கு விடையாக கிடைக்கும். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த comparision ஒரு user defined callback function மூலமாக நடைபெறுகிறது.

array_intersect_ukey(array1, array2,.. key_compare_function);

Note: array_intersect_ukey() இந்த function ஒரு array-ஐ return செய்யும். நாம் இந்த function-ல் ஒன்றுக்கு மேற்பட்ட array-களை மற்றும் function-ஐ argument-களாக அனுப்புவோம். முதல் array-ல் உள்ள key மற்ற array-களில் உள்ள key-களுடன் compare செய்து ஒரே மாதிரியான key-கள் array-வாக return செய்யும்.array_intersect_ukey() function array-ல் உள்ள key-ஐ மட்டும் ஒரே மாதிரியாக உள்ளதா என compare செய்யும் values-ஐ compare செய்யாது.

Example

<?php
function compare($data1,$data2)
{
if ($data1===$data2)
  {
  return 0;
  }
  return ($data1>$data2)?1:-1;
}
$data1=array("a"=>"java","b"=>"php","c"=>"angular","d"=>"reactjs");
$data2=array("a"=>"python","c"=>"c++","d"=>"javascript");
$result=array_intersect_ukey($data1,$data2,"compare");
echo '
';
print_r($result);
?>

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,$data1 array-வில் உள்ள key a,c,d $data2 array-வில் உள்ள a,c,d என்ற key-யுடன் பொருந்தியுள்ளது. compare என்ற callback function மூலமாக இங்கு key comparision நடைபெறும். எனவே a => java c => angular d => reactjs என்ற output நமக்கு கிடைக்கிறது. Output:


Array
(
    [a] => java
    [c] => angular
    [d] => reactjs
)

Comments