compact() Function in PHP

compact() function நாம் கொடுக்கும் வெவ்வேறு variable மற்றும் அதன் values-ஐ இணைத்து ஒரு array-யாக உருவாக்குவதற்கு பயன்படுகிறது.

compact(varname1, varname2, ...);

Note: compact() function-ல் variable name அல்லது associative array-இல் store செய்யபட்டிருக்கும் key மற்றும் values கொண்ட variable argument-ஆக அனுபபடுகிறது. இங்கு குறைந்தது ஒரு argument கட்டாயமாக கொடுக்க வேண்டும்.

Example

  <?php
$brand = "Apple";
$model = "iPhone";
$color = "Black";
$result = compact("brand", "model", "color");
print_r($result);  

?>
  
  

மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் variable மற்றும் அதன் values முறையே $brand=Apple,$model=iPhone,$color=Black என store செய்யபட்டுள்ளது. compact() function-இல் இந்த variable names-களை argument-ஆக அனுப்பும் போது brand => Apple,model => iPhone,color => Black என்ற associative array நமக்கு விடையாக கிடைக்கிறது.

Output:
Array
(
    [brand] => Apple
    [model] => iPhone
    [color] => Black
)

Comments