array_splice() Function in PHP

array_splice() function இங்கு ஒரு array-ல் உள்ள நமக்கு தேவையான elements-களை பிரித்துஎடுபதற்கு பயன்படுகிறது, அதேபோல் array-ல் உள்ள elements-களை remove செய்துவிட்டு, அந்த array-யோடு நமக்கு தேவையான முறையில் புதிதாக elements-களை சேர்த்துக்கொள்ள பயன்படுகிறது.

array_splice(array,start,length,array)

Note: array_splice() இங்கு syntax-ல் முதல் argument ஒரு array-ஆக இருக்கும், 2-வது argument array-ல் உள்ள remove ஆக வேண்டிய starting index value-ஆக இருக்கும். 3-வது argument remove ஆக வேண்டிய element-களின் எண்ணிக்கை ஆகும். 4-வது argument புதிதாக உருவாக்கப்பட்ட array ஆகும்.

Example

<?php
$animal = array("Fox","Eagle","Bull","Bear","Crocodile");
$birds = array("Peacock","parrot");
$result = array_splice($animal,1,2,$birds);
print_r($result);
print_r($animal);
?>
  
  

மேலே உள்ள example-ஐ கவனிக்கவும்,array_splice() இங்கு $animal மற்றும் $birds இரண்டு array கொடுக்கப்பட்டுள்ளது. இவை array_splice()-ல் argument-ஆக கொடுக்கப்பட்டுள்ளது. மேலே உள்ள $animal என்ற variable-ல் Eagle,Bull என்ற element கிடைக்கிறது. array_splice()-ல் argument-ஆக 1 என்ற index மற்றும் 2 என்ற element-களின் எண்ணிக்கை கொடுப்பதால் இந்த Eagle,Bull என்ற element கிடைக்கிறது. இங்கு முக்கிய அம்சம் என்னவென்றால் array_splice()-ல் நான்காவது argument-ஆக $birds என்ற array கொடுக்கப்பட்டுள்ளது. எனவே array_splice() run ஆன பிறகு $animal variable-ல் Eagle,Bull என்ற element இருந்த இடத்தில் இரண்டாவது array-ல் உள்ள Peacock,parrot elements-களை சேர்த்துகொள்ளும். எனவே $animal variable-ல் Fox,Peacock,parrot,Bear,Crocodile நமக்கு கிடைக்கிறது.

Output:
Array
(
    [0] => Eagle
    [1] => Bull
)

Array
(
    [0] => Fox
    [1] => Peacock
    [2] => parrot
    [3] => Bear
    [4] => Crocodile
)

Comments