PHP என்றால் என்ன?

PHP என்பது ஒரு Server Side Scripting language. எளிமையாக சொல்ல வேண்டுமானால் உங்களுக்கு ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. அதை இணையமூலம் வாங்குவதற்காக ஏதோ ஒரு பதிப்பகத்தின் இணையத்தளத்த்திற்கு செல்கிறீர்கள்.அந்த பதிப்பகத்தின் இணையத்தளம் PHP மூலம் உருவாகப்பட்டதெனில். அந்த இணையதளத்தில் செய்யும் அனைத்து வேலைகளும் உங்களுடைய கணினியில் (Client side) Process ஆகாமல் ,பதிப்பகத்தின் இணையதளம் எந்த Web Server-ல் (server side) இருக்கிறதோ அங்குதான் Process செய்யப்பட்டு உங்களுக்கு தேவையான விவரங்களை இணையதளம் கொடுக்கும். அவ்வாறு server இல் செயல்படுத்தப்படும் நிரல்கள் server side scripting language எனப்படும். PHP நிரல்கள் அனைத்தும் server side இல் ப்ரோசெச்ஸ் செய்யப்படுவதால். PHP ஒரு server side scripting language ஆகும்.

Ruby, Python, Perl ஆகிய மொழிகளும் Server Side Scripting Language ஆக பயன்படுத்தப்படுகிது. அதுபோலவே PHP யும் இருந்தாலும், PHP சில தனிச்சிறப்புகளைக் கொண்டுள்ளது. அது என்னவெனில் நம்முடைய இணையதள உருவாக்க வேலைகளை எளிமையாக செய்வதற்கென நிறைய Extension களை வைத்திருகிறது.

குறிப்பாக Database இல் தகவல்களை சேமிப்பதற்கும், Database இல் இருக்கும் தகவல்களை இணையதளதின் மூலம் பெறுவதற்கும், இணையதளங்களை Dynamic ஆக வடிவமைக்கவும், Content களை திறம்பட கையாளுவதற்கும் மிகவும் எளிமையான வழிகளை PHP கொண்டுள்ளது. அதனால் மேற்காணும் வேலைகளை நாம் மற்ற மொழிகளில் செய்வதை விட PHP யில் எளிமையாகசெய்யலாம்.

Comments