Types of Variables
Javascript இல் மூன்று வகையான variable types கள் உள்ளன.
1) var
2) let
3) const
var - javascript இல் மிகவும் பிரபலமான keyword var keyword ஆகும். ஆரம்பம் முதல் variable declare செய்வதற்கு var keyword ஆனது பயன்படுகிறது. var keyword function level scope ஆகும்.
let - modern javascript இல் let keyword ஆனது introduce செய்யப்பட்டது. let keyword ம் var போல variable declare செய்வதற்கு பயன்படுகிறது. let keyword block level scope ஆகும்.
const - modern javascript இல் const keyword ஆனது introduce செய்யப்பட்டது. let keyword ம் var மற்றும் let போல variable declare செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு முக்கியமாக const keyword மூலம் variable declare செய்தால் அந்த value ஐ மாற்ற இயலாது.
Rules To Declare The Variables
Javascript இல் ஒரு variable ஐ declare செய்வதற்கு rules களை கொண்டிருக்கும் அதைப்பற்றி காண்போம்,
1) variable இன் keyword name ஆனது if மற்றும் int என்பது போல வரகூடாது.
2) variable இன் name ஆனது letter இல் மட்டுமே start ஆக வேண்டும்.
3) variable இன் name ஆனது number இல் start ஆக கூடாது.
4) variable இன் name இல் space மற்றும் hyphon போன்றவை வரகூடாது.
5) Javascript ஆனது case-sensitive முறையை பின்பற்றுகிறது இங்கு uppercase மற்றும் lowercase letters வேறுவேறாக பார்க்கப்படும்.
6) variable உடைய name ஆனது meaning full name ஆக இருக்க வேண்டும். எளிதில் புரிந்துகொள்ள கூடிய name ஆக இருக்க வேண்டும்.
7) variable இன் name ஆனது camelcase முறையில் கொடுப்பது நல்லது Example: var firstName. இது போல குடுக்க வேண்டும்.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments