JavaScript Anonymous Function

Javascript function ஆனது ஒரு குறிப்பிட்ட operation ஐ perform செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு javascript function ஆனது code ஐ reuse செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு Anonymous Function இல் function ஆனது ஒரு variable க்கு assign செய்யப்படுகிறது. அதேபோல் variable name ஐ வைத்துகொண்டு function ஐ call செய்துகொள்ளலாம்.

var expression_name = function ( parameters ) { // code to be executed }

Note: Code reusability: இங்கு function code ஐ reuse செய்வதற்கு மிகவும் பயன்படுகிறது. குறிப்பாக Anonymous Function function இல் function name கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு function define செய்யும் போது parameter value அனுப்பலாம் அதேபோல் function ஐ call செய்யும் போது argument value ஐ அனுப்பலாம். Default parameter method ம் இங்கு பொருந்தும்.

Example1

<script>
var message = function(){
    document.writeln("This is a Function");
  }
  message();
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு message என்ற function என்ற expression ஐ பயன்படுத்தி ஒரு function ஆனது define செய்யப்படுகிறது. இந்த function ஒரு string value ஐ print செய்யும் வேலையை செய்கிறது. அதேபோல் இங்கு function expression name ஐ வைத்துகொண்டு இந்த function ஐ call செய்யலாம். message() என்ற function call செய்யபடுகிறது. எனவே நமக்கு output This is a Function என கிடைக்கிறது.

Output:

This is a Function

Example2

<script>
  var data = function(input){
    document.writeln(input);
  }
  data("Parallel Codes");
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற function என்ற expression ஐ பயன்படுத்தி ஒரு function ஆனது define செய்யப்படுகிறது. இந்த function ஒரு string value ஐ print செய்யும் வேலையை செய்கிறது. அதேபோல் இங்கு function expression name ஐ வைத்துகொண்டு இந்த function ஐ call செய்யபடுகிறது அதேபோல் "Parallel Codes" என்ற string argument ஆக அனுபப்படுகிறது. இந்த function string argument ஐ receive செய்து print செய்கிறது.எனவே நமக்கு output "Parallel Codes" என கிடைக்கிறது.

Output:

Parallel Codes

Comments