JavaScript Object.freeze() Method

Javascript இல் Object.freeze() method இங்கு ஒரு object இல் ஏற்கனவே இருக்கும் enumerable property அதாவது key மற்றும் value ஐ தவிர இந்த object க்கு புதிதாக property add செய்வதை தடுகிறது. பிறகு ஏற்கனவே இருக்கும் properties இல் modification செய்வதை இந்த method தடுக்கிறது.

Object.freeze(obj)

Note: இங்கு Object.freeze() method இங்கு freeze செய்யவேண்டிய object ஆனது argument ஆக அனுப்பப்படுகிறது. இந்த method இல் புதிதாக property add செய்வது மற்றும் properties இல் ஏதேனும் modification செய்வதை தடுக்கிறது.

Example1

<script>
const flowers = {
    first:"rose",
    second:"jasmine"
   };  
Object.freeze(flowers); 
flowers.first = "jasmine"; 
document.writeln(flowers.first);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.freeze() method இல் flowers என்ற object மற்றும் அதற்கு properties கள் assign செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் Object.freeze() method இல் flowers என்ற object freeze செய்யப்படுகிறது. எனவே இங்கு ஏற்கனவே இருக்கும் properties இல் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது. flowers.first = "jasmine" என மற்ற முயன்ற போது அதன் value மாறவில்லை இங்கு output rose என கிடைக்கிறது.

Output:

rose

Example2

<script>
  const books = {
    first:"tamil",
    second:"english"
   };  
Object.freeze(books); 
books.third = "maths"; 
document.writeln(books.first+ "-"+books.second+"-"+books.third);   
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.freeze() method இல் books என்ற object மற்றும் அதற்கு properties கள் assign செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் Object.freeze() method இல் books என்ற object freeze செய்யப்படுகிறது. இந்த object இல் புதிதாக எந்தவித properties ம் assign செய்ய முடியாது. books.third = "maths" என்ற புதிய property ஐ object க்கு assign செய்த போது assign ஆகவில்லை. இங்கு output tamil-english-undefined என கிடைக்கிறது.

Output:

tamil-english-undefined

Comments