Javascript Call Apply Bind Functions
Javascript இல் அனைத்து function களிலும் default ஆக call,apply,bind மூன்று properties கள் இருக்கும். இவை அனைத்தும் ஒரு function இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு this என்பது current object ஐ குறிக்கிறது.call,apply,bind ஆகியன function borrowing இல் முக்கிய பங்கு வகிக்கிறது.
Javascript இல் call,apply,bind function இல் நாம் ஒரு object மற்றும் parameter களை argument ஆக அனுப்புகிறோம்.எனவே function இல் இருக்கும் this ஆனது நாம் argument இல் அனுப்பும் object ஐ current object ஆக எடுத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு function இல் இருக்கும் code களை execute செய்யும்.
Javascript Bind Function
Bind Function இங்கு borrowing function name மற்றும் dot operator bind() என்ற முறையில் call செய்யப்படும். இங்கு நாம் ஒரு object ஐ argument ஆக அனுப்பலாம். இங்கு இறுதியில் ஒரு function ஆனது return ஆகிறது. பிறகு இந்த function ஐ call செய்வதன் மூலம் function execute ஆகிறது.
Javascript Call Function
Call Function இங்கு borrowing function name மற்றும் dot operator call() என்ற முறையில் call செய்யப்படும். இங்கு நாம் ஒரு object மற்றும் comma seperated values களை argument ஆக அனுப்பலாம். இங்கு இறுதியில் நாம் argument ஆக அனுப்பும் object ஐ current object ஆக எடுத்துக்கொண்டு நமக்கு அதற்கு ஏற்றவாறு output ஐ கொடுக்கிறது.
Javascript Apply Function
Apply Function இங்கு borrowing function name மற்றும் dot operator apply() என்ற முறையில் call செய்யப்படும். இங்கு நாம் ஒரு object மற்றும் array values களை argument ஆக அனுப்பலாம். இங்கு இறுதியில் நாம் argument ஆக அனுப்பும் object ஐ current object ஆக எடுத்துக்கொண்டு நமக்கு அதற்கு ஏற்றவாறு output ஐ கொடுக்கிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments