includes() Function in Javascript
includes() function இங்கு ஒரு array இல் ஒரு குறிப்பிட்ட element உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது.
array.includes(element,start)
Example1
<script>
var data = ["parallel","codes","learn","programming","tamil"];
var res = data.includes("parallel");
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் "parallel","codes","learn","programming","tamil" என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.includes("parallel") function ஐ பயன்படுத்துகிறோம். இங்கு data என்ற array இல் "parallel" என்ற string element உள்ளதா இல்லையா என்பதை கண்டறிய பயன்படுகிறது. இங்கு "parallel" என்ற string array இல் உள்ளது எனவே true என output கிடைக்கிறது.
true
Example2
<script>
var input = [10,30,50,70,90];
var res = input.includes(100);
document.writeln(res);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் 10,30,50,70,90 என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு input.includes(100) function ஐ பயன்படுத்துகிறோம். இங்கு input என்ற array இல் 100 என்ற number ஆனது அமைந்துள்ளதா என கண்டறிய பயன்படுகிறது. இங்கு 100 என்ற number ஆனது array இல் இல்லை எனவே false என output கிடைக்கிறது.
false
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments