JavaScript Function Default Parameters

Javascript function இல் parameter மற்றும் argument மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. parameter ஆனது நாம் ஒரு function ஐ define செய்யும் போது square bracket உள்ளே supply செய்யபடுகிறது. அதேபோல் argument என்பது function ஐ call செய்யும் போது supply செய்யப்படுகிறது. இங்கு சில சமயங்களில் parameter value ஆனது default ஆக set செய்யப்படுகிறது.

function name(param1=default1, param2=default2,..) { // Code area }

Note: Javascript function இல் parameter மற்றும் argument மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு parameter மற்றும் argument ஐ பயன்படுத்தி function இன் உள்ளே repeated ஆன வேலைகளை செய்து கொள்ளலாம். எனவே நாம் function call செய்யும் போது அனுப்பும் argument களுக்கு ஏற்றவாறு function ஆனது அதற்கு ஏற்றவாறு work ஆகிறது. இங்கு javascript function define செய்யும் போது parameter value ஐ default ஆக set செய்து கொள்ளலாம். இங்கு நாம் function ஐ call செய்யும் போது argument value அனுப்பவில்லை என்றால் default parameter இல் இருக்கும் value ஐ எடுத்துகொள்ளும்.

Example1

<script>
function say(message='Parallel Codes') {
    document.writeln(message);
}
say();
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு say என்ற function define செய்யும் போது message='Parallel Codes' என்ற default parameter value ஐ set செய்கிறோம். அதேபோல் இந்த function உள்ளே நாம் அனுப்பும் string ஐ print செய்து output ஆக கொடுக்கிறது. இங்கு function ஐ call செய்யும் போது எந்தவித argument ம் அனுப்பவில்லை, எனவே இந்த function ஆனது message='Parallel Codes' என்ற default parameter value ஐ எடுத்துக்கொண்டு document.writeln(message) என்ற function மூலம் output ஐ print செய்கிறது.

Output:

Parallel Codes

Example2

<script>
  function add(x, y = 1, z = 2) {
    document.writeln(x + y + z);
}
add(10);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு add என்ற function define செய்யும் போது x, y = 1, z = 2 என்ற மூன்று parameters அனுப்புகிறோம். இங்கு y = 1, z = 2 ஆகிய இரண்டும் default parameter களாக உள்ளது. அதேபோல் add(10) என்ற function ஐ call செய்யும் போது ஒரு argument அதாவது முதல் parameter value மட்டும் அனுப்புகிறோம். y,z values களை default parameter value இல் இருந்து எடுத்துகொள்ளும் எனவே நமக்கு output 13 என கிடைக்கிறது.

Output:

13

Comments