JavaScript Object.defineProperties()

Javascript இல் Object.defineProperties() method இங்கு ஒரு object க்கு ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட properties ஐ assign செய்வதற்கு பயன்படுகிறது.இங்கு Object.defineProperties() method மூலமாக ஒரு புதிய object மற்றும் properties ஐ உருவாக்கலாம் அல்லது available ஆக இருக்கும் ஒரு object இன் properties ஐ மாற்றலாம்.

Object.defineProperties(obj, props)

Note: இங்கு Object.defineProperties() method இல் இரண்டு argument கள் அனுபப்படுகிறது அவைகள் முறையே ஒரு object அதன் Properties ஆகியன. இங்கு ஒரு object க்கு ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட properties ஐ assign செய்யலாம்.இந்த function இல் முதல் argument ஒரு object மற்றும் இரண்டாவது argument properties அதாவது அதன் name மற்றும் values ஆக அமையும்.

Example1

<script>
const person = {};  
Object.defineProperties(person, {  
    'city':{value: "chennai"},'state':{value: "Tamilnadu"} } );  
document.writeln(person.city+" "+person.state);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.defineProperties() method ஒரு object க்கு ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட properties ஐ assign செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு person என்ற object க்கு city மற்றும் state ஆகிய இரண்டு property அதன் values களை assign செய்கிறோம். person.city மற்றும் person.state என print செய்து பார்க்கும் போது அதன் values கள் chennai Tamilnadu என output ஆக கிடைக்கிறது.

Output:

chennai Tamilnadu

Example2

<script>
  const person = {};  
Object.defineProperties(person, {  
    'age':{value: 30},'sex':{value: "female"} } );  
document.writeln(person.age+" "+person.sex);   
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.defineProperties() method ஒரு object க்கு ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட properties ஐ assign செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு person என்ற object க்கு age மற்றும் sex ஆகிய இரண்டு property அதன் values களை assign செய்கிறோம். person.age மற்றும் person.sex என print செய்து பார்க்கும் போது அதன் values கள் 30 female என output ஆக கிடைக்கிறது.

Output:

30 female

Comments