JavaScript Bind Function

Javascript Bind Function இங்கு ஒரு function இன் this context ஐ மாற்றுகிறது நாம் argument ஆக அனுப்பும் object ஐ current object ஆக எடுத்து கொண்டு அதற்கு ஏற்றவாறு function ஐ execute செய்கிறது இங்கு முக்கியமாக bind function ஆனது ஒரு புதிய function ஐ தருகிறது நாம் இதை ஒரு variable இல் store செய்து கொண்டு பிறகு variable call செய்து கொள்ளலாம்.

function_name.bind($arguments);

Note: Javascript bind Function இங்கு object ஐ argument ஆக அனுப்பலாம். இங்கு bind function இல் முக்கியமாக function borrowing ஆனது நடைபெறுகிறது. நாம் argument ஆக அனுப்பும் object ஐ பொருத்து function உள்ளே இருக்கும் code execute ஆகிறது. இங்கு borrowing function name மற்றும் dot operator bind() என்ற முறையில் call செய்யப்படும் இறுதியில் bind function ஒரு புதிய function ஐ return செய்கிறது நாம் புதிய function ஐ call செய்வதன் மூலமாக code ஐ execute செய்யலாம்.

Example1

<script>
function display(){
  return this.text;
  }
  const data = {
    text:"This is Bind method"
  }
  var result = display.bind(data);
  document.writeln(result());
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு display என்ற function current object இல் இருக்கும் text என்ற key இன் value ஐ display செய்கிறது. bind method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு data என்ற object க்கு text:"This is Bind method" என்ற key values கள் உள்ளன. இங்கு display.bind(data) என்ற முறையில் call செய்யும் போது display function இன் this context இல் data என்ற object கிடைக்கிறது, பிறகு இந்த function ஒரு புதிய function ஐ return செய்கிறது அதனை result என்ற variable இல் store செய்கிறோம் result variable ஐ call செய்யும் போது நமக்கு இங்கு output "This is Bind method" என கிடைக்கிறது.

Output:

This is Bind method

Example2

<script>
  function subtract(){
  return this.a-this.b;
  }
  const data = {
    a:20,b:10
  }
var result =  subtract.bind(data);
document.writeln(result());
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு subtract என்ற function current object இல் இருக்கும் a மற்றும் b என்ற key இன் value ஐ subtract செய்கிறது. Bind method ஆனது object இன் this context ஐ மாற்றுகிறது. இங்கு data என்ற object க்கு a:20,b:10 என்ற key values கள் உள்ளன. இங்கு add.bind(data) என்ற முறையில் call செய்யும் போது subtract function இன் this context இல் data என்ற object கிடைக்கிறது, பிறகு இந்த function ஒரு புதிய function ஐ return செய்கிறது அதனை result என்ற variable இல் store செய்கிறோம் result variable ஐ call செய்யும் போது நமக்கு இங்கு output 10 என கிடைக்கிறது.

Output:

10

Comments