Javascript String
Javascript string ஆனது ஒரு object ஆகும். Javascript இங்கு string sequence of characters களை கொண்டிருக்கும்.
Javascript இல் இரண்டு வழிகளில் string ஐ உருவாக்கலாம்.அவைகளாவன,
1) By string literal
2) By string object (using new keyword)
Javascript இல் literal string ஐ உருவாக்கலாம், அதுதவிர new keyword ஐ கொண்டு நாம் ஒரு string object ஐ உருவாக்கலாம்.
Example1
<script>
var name = "Parallel Codes Learn Programming In Tamil";
document.writeln(name);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் name என்ற variable இல் "Parallel Codes Learn Programming In Tamil" என்ற string ஆனது store செய்யப்பட்டுள்ளது. இங்கு literal string முறையை பயன்படுத்தி string ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. string ஆனது double quotes ஆல் உள்ளடங்கி இருக்கும். document.writeln(name) என்ற function ஐ பயன்படுத்தும் போது குறிப்பிட்ட string ஆனது output ஆக கிடைக்கிறது.
Parallel Codes Learn Programming In Tamil
Example2
<script>
var input_string = new String("Linto.in Programming In Tamil");
document.writeln(input_string);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு new keyword ஐ பயன்படுத்தி ஒரு string object ஆனது உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு input_string என்ற instance variable இல் "Linto.in Programming In Tamil" என்ற string ஆனது save ஆகி இருக்கும். document.writeln(input_string) என்ற function ஐ பயன்படுத்தும் போது குறிப்பிட்ட string ஆனது output ஆக கிடைக்கிறது.
Linto.in Programming In Tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments