JavaScript Object.create() Method

Javascript இல் Object.create() method இங்கு ஒரு object மற்றும் அதற்குரிய enumerable properties create செய்வதற்கு பயன்படுகிறது. இங்கு முக்கியமாக ஒரு prototype object ஐ வைத்து ஒரு புதிய object create செய்யப்படுகிறது.

Object.create(prototype[, propertiesObject])

Note: இங்கு Object.create() method இங்கு prototype object மற்றும் புதிய object குரிய properties argument ஆக அனுபப்படுகிறது. இந்த function புதிய ஒரு object ஐ create செய்ய பயன்படுகிறது.

Example1

<script>
const books = {
    first:"tamil",
    second:"english"
   };  
const data = Object.create(books,{third:{value:"maths"}});
document.writeln(data.third);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு Object.create() method இல் prototype object அதாவது books மற்றும் புதிய object குரிய properties ஆகியன argument ஆக அனுபப்படுகிறது. இங்கு data object இல் third என்ற key மற்றும் அதன் value maths என assign ஆகிறது. அதேபோல் இதன் prototype object இல் books object இன் properties assign ஆகிறது. இங்கு document.writeln(data.third) என கொடுக்கும் போது maths என்ற value output ஆக கிடைக்கிறது.

Output:

maths

Example2

<script>
  let Student = {
  name: "xyz",
  age: 24,
  marks: 80,
  display() {
    document.writeln("Marks:", this.marks);
  }
};
let std1 = Object.create(Student);
std1.marks = 100;
std1.display();  
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு Object.create() method இங்கு Student என்ற ஒரு prototype object உள்ளது மற்றும் std1 என்ற புதிய object create செய்யப்படுகிறது. இங்கு Object.create() method இல் Student என்ற prototype object argument ஆக அனுபப்படுகிறது. எனவே std1 என்ற object இன் prototype object ஆக Student object அமைகிறது. இங்கு உள்ள method மற்றும் properties ஐ நாம் std1 object இல் access செய்து கொள்ளலாம். இங்கு std1.marks = 100 என்ற value assign செய்யப்படுகிறது. இங்கு முக்கியமாக this என்பது current object ஐ denote செய்கிறது எனவே std1.display() என்ற method ஐ access செய்யும் போது std1 current object ஆக உள்ளது எனவே std1.marks = 100 என்ற இருக்கும். எனவே output Marks: 100 என கிடைக்கிறது.

Output:

Marks: 100

Comments