Multi-datatypes in Arrays
Array ஒரேயொரு variable இல் ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்யமுடியும்.
Array இல் different datatypes கள் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்யமுடியும். உதராணமாக String,Number,Boolean,Undefined,null,Object etc,.. போன்றவை.
Example1
<script>
var data = ["hello",100,true,"family",200,false];
console.log(data);
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் data என்ற variable இல் ["hello",100,true,"family",200,false] என்ற different datatypes கள் உள்ள values கொண்ட array ஆனது உள்ளது. இந்த முறையை பயன்படுத்தி ஒரே array இல் different datatypes கள் உள்ள ஒன்றிற்கு மேற்பட்ட values களை store செய்து கொள்ளலாம். console.log இல் array variable ஐ argument ஆக அனுப்பும் போது array ஆனது console option அதாவது developer tools இல் output ஆக கிடைக்கும். output ஐ கவனிக்கவும்.
(6) ['hello', 100, true, 'family', 200, false] 0: "hello" 1: 100 2: true 3: "family" 4: 200 5: false
Array Length Property
Javascript இல் array length property மிகவும் முக்கியமான concept ஆகும், ஒரு array இல் பல்வேறு விதமான வேலைகள் அதன் length ஐ பொருத்து செய்யபடுகிறது. இந்த property ஐ பயன்படுத்துவதற்கு array இன் variable name. மற்றும் length என குடுக்க வேண்டும்.
Example2
<script>
var number = [100,200,300,400,500,600,700];
console.log(number.length);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் number என்ற variable இல் [100,200,300,400,500,600,700] என்ற values கொண்ட array ஆனது உள்ளது. இங்கு length property ஆனது பயன்படுத்தபட்டுள்ளது. number.length என குடுக்கும் போது array இன் length ஆனது நமக்கு கிடைக்கிறது. இங்கு output 7 என கிடைக்கிறது.
7
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments