flatMap() Function in Javascript

flatMap() function இங்கு ஒரு array ஆனது map function ஐ வைத்து map செய்யப்படுகிறது, அதேபோல் map செய்யப்பட்ட value ஆனது ஒரு புதிய array இல் store (flatten) செய்யப்படுகிறது.

array.flatMap(callback,thisArg);

Note: flatMap() function இங்கு இரண்டு values argument ஆக அனுபப்படுகிறது. அவைகள் முறையே ஒரு callback மற்றும் thisArg ஆகியன. இங்கு இந்த callback function இல் currentvalue,index மற்றும் array ஆகியன parameter களாக கிடைக்கும். இவ்வாறு map function செயல்படுகிறது.இந்த function முக்கியமாக ஒரு புதிய array ஐ உருவாக்குவதற்கு பயன்படுகிறது.

Example1

<script>
var data = [5,10,20,40];
var res = data.flatMap(function(val){
   return val*2;
});
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [5,10,20,40] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.flatMap(function(val) function ஐ பயன்படுத்துகிறோம், flatMap() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் data என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது, இது map function போல் செயல்படுகிறது. இங்கு வரும் values ஐ இரண்டால் multiply செய்து கிடைக்கும் புதிய values களை flatMap() function ஒரு புதிய array இல் store செய்கிறது output ஐ கவனிக்கவும்.

Output:

[10,20,40,80]

Example2

<script>
var input = ["Hai","Hello","Welcome"];
var res = input.flatMap(function(val){
   return val+" "+"Parallel Codes";
});
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற array variable இல் ["Hai","Hello","Welcome"] என்ற array values கள் save செய்யபட்டுள்ளது. இங்கு input.flatMap(function(val) என்ற function ஐ பயன்படுத்துகிறோம், flatMap() function ஒரு callback function ஐ argument ஆக பெறுகிறது. இங்கு இந்த callback function இல் நாம் input என்ற array variable இல் உள்ள values கள் parameter களாக கிடைக்கிறது,இது map function போல் செயல்படுகிறது.இங்கு கிடைக்கும் string values function உள்ளே இருக்கும் string values உடன் concatnate செய்து நமக்கு output புதிய array இல் கிடைக்கிறது.

Output:

[Hai Parallel Codes,Hello Parallel Codes,Welcome Parallel Codes]

Comments