JavaScript Objects
Javascript object என்பது ஒரு entity ஆகும் இதில் state மற்றும் behavior இருக்கும் அதாவது properties மற்றும் method கள் உள்ளடக்கி இருக்கும்.
car, pen, bike, chair, glass, keyboard, monitor etc போன்றவை object களாக பார்க்கப்படுகிறது.
JavaScript ஒரு object based language ஆகும். javascript இல் அனைத்தும் object களாக பார்க்கப்படுகிறது.
JavaScript ஒரு template ஆகும் இது class based இல்லை. இங்கு class ஐ create செய்து object ஐ பெறுவதற்கு மாறாக நாம் direct ஆக object ஐ create செய்யலாம்.
JavaScript இல் object ஐ மூன்று வழிகளில் create செய்யலாம் அவையாவன,
1) By object literal
2) By creating instance of Object directly (using new keyword)
3) By using an object constructor (using new keyword)
By object literal
object={property1:value1,property2:value2.....propertyN:valueN} இங்கு curly braces க்கு இடையில் property colon value என்ற முறையை பயன்படுத்தி javascript இல் ஒரு object literal ஐ உருவாக்கலாம்.
By creating instance of Object directly (using new keyword)
Javascript இல் var objectname=new Object() அதாவது new keyword ஐ பயன்படுத்தி ஒரு instance ஐ உருவாக்கலாம். இங்கு object ஐ வைத்துகொண்டு அதற்கு values களை assign செய்து கொள்ளலாம்.
By using an object constructor (using new keyword)
JavaScript இல் object constructor முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கு ஒரு function create செய்யப்பட்டு அதில் argument கொடுக்கப்பட்டிருக்கும்.இங்கு new keyword ஐ வைத்து function க்கு parameter களை அனுப்பலாம். இங்கு முக்கியமாக this keyword current object க்கு value ஐ assign செய்ய பயன்படுகிறது.
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments