JavaScript Object.assign()
Javascript இல் Object.assign() method ஆனது source object இல் உள்ள enumerable மற்றும் own properties ஐ copy செய்து target object க்கு அனுப்புகிறது. பின்பு இந்த function target object ஐ return செய்கிறது.
Object.assign(target, ...sources)
Example1
<script>
let object = {
name: 'keyboard',
price: 500
};
let clonedobject = Object.assign({}, object);
document.writeln(`${clonedobject.name} ${clonedobject.price}`);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு object என்ற variable இல் object properties ஆனது assign செய்யப்பட்டுள்ளது. இங்கு Object.assign() method இல் ஒரு empty object மற்றும் source object argument ஆக அனுபப்படுகிறது. இங்கு source object இல் உள்ள properties ஆனது target object க்கு copy ஆகிறது. clonedobject என்ற variable இல் keyboard 500 என்ற output கிடைக்கிறது.
keyboard 500
Example2
<script>
let box = {
height: 10,
width: 20
};
let style = {
color: 'Red',
borderStyle: 'solid'
};
let styleBox = Object.assign({}, box, style);
document.writeln(`${styleBox.height} ${styleBox.width} ${styleBox.color} ${styleBox.borderStyle}`);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு box மற்றும் style என்ற இரண்டு object கள் உள்ளன. இங்கு empty object மற்றும் இரண்டு source object கள் Object.assign() இல் argument ஆக அனுபப்படுகிறது. எனவே இங்கு புதிய target object styleBox என்ற copy செய்யப்பட்ட object output ஆக கிடைக்கிறது. output இல் 10 20 Red solid என்ற values print ஆகிறது.
10 20 Red solid
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments