By using an Object constructor
Javascript இல் constructor ஐ பயன்படுத்தி ஒரு object ஐ உருவாக்கலாம், இங்கு முக்கியமாக function மற்றும் அதற்கான argument உருவாக்கபடுகிறது. அதேபோல் this keyword பயன்படுத்தி current object காண values கள் assign செய்யப்படுகிறது.
variable_name = new function_name(arguments);
Example
<script>
function animal(id, name, weight) {
this.id = id;
this.name = name;
this.weight = weight;
}
animal_data = new animal(1, "lion", 190);
document.write(animal_data.id + " " + animal_data.name + " " + animal_data.weight);
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு animal_data என்ற object animal என்ற constructor function ஐ பயன்படுத்தி உருவாக்கபடுகிறது. இங்கு new keyword object ஐ உருவாக்க பயன்படுகிறது. current object க்கு உரிய values கள் function க்கு parameter களாக அனுபப்படுகிறது. அதேபோல் function இல் இந்த values கள் argument களாக பெறப்படுகிறது. பின்பு current object க்கு உரிய values this keyword பயன்படுத்தி அந்தந்த properties க்கு உரிய values கள் assign செய்யப்படுகிறது. இங்கு animal_data என்ற object க்கு உரிய values animal என்ற constructor function க்கு 1, "lion", 190 parameter களாக அனுபப்படுகிறது அதேபோல் அந்த function இல் this keyword பயன்படுத்தி அந்த object க்கு உரிய key மற்றும் values assign செய்யப்படுகிறது.இங்கு animal_data.id = 1 , animal_data.name = lion மற்றும் animal_data.weight = 1900 என இருக்கும்.
1 lion 190
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments