var keyword in Javascript
var keyword ஆனது javascript இல் ஒரு variable ஐ declare செய்வதற்கு பயன்படுகிறது.
var keyword பயன்படுத்தி ஒரு variable declare செய்யும் போது அதற்கான value initialize செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தடுத்த step களில் அதற்கான value ஐ initialize செய்து கொள்ளலாம்.
உதராணமாக var data; இங்கு var என்பது keyword மற்றும் data என்பது variable name இங்கு data என்ற variable declare செய்யப்பட்டுள்ளது.
var keyword பயன்படுத்தி ஒரு variable ஐ அதாவது ஒரு variable name ஐ redeclare செய்து கொள்ளலாம்.
var keyword ஆனது scope specific ஆக செயல்படாது. ஒரு variable ஆனது scope க்கு வெளியில் மற்றும் உள்ளே ஒரே மாதிரியாக செயல்படும்.
var keyword பயன்படுத்தி ஒரு scope இன் உள்ளே ஒரு variable காண value ஐ reinitialize செய்யும் போது இறுதியாக அந்த variable இல் உள்ள value ஐ எடுத்து கொள்ளும்.
var keyword ஆனது function scope ஆக செயல்படுகிறது.var keyword பயன்படுத்தி ஒரு variable declare செய்யும் போது இங்கு variable ஆனது scope க்கு வெளியில் ஒரு variable ஆகவும் மற்றும் scope க்கு உள்ளே ஒரு variable ஆகவும் செயல்படுகிறது.
var keyword in Javascript object
var keyword பயன்படுத்தி ஒரு object declare செய்யும் போது அதற்கான value initialize செய்ய வேண்டிய அவசியம் இல்லை. var keyword பயன்படுத்தி ஒரு object ஐ அதாவது ஒரு variable name ஐ redeclare செய்து கொள்ளலாம்.var keyword ஆனது function scope ஆக செயல்படுகிறது.var keyword பயன்படுத்தி ஒரு object declare செய்யும் போது இங்கு variable ஆனது scope க்கு வெளியில் ஒரு object ஆகவும் மற்றும் scope க்கு உள்ளே ஒரு object ஆகவும் செயல்படுகிறது.
Example1
<script>
var input = 10;
function test() {
var input = 20;
document.writeln(input);
}
test();
document.writeln(input);
</script>
மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் var keyword ஒரு function scope specific ஆக செயல்படுகிறது. இங்கு input என்ற variable function க்கு வெளியே ஒரு variable ஆகவும் function க்கு உள்ளே ஒரு variable ஆகவும் செயல்படும். எனவே இங்கு function உள்ளே input variable value 20 எனவும் function வெளியே input variable value 10 எனவும் இருக்கும்.
20 10
Example2
<script>
var obj = {
name:"parallel codes"
};
function test() {
var obj = {
name:"Linto.in"
};
document.writeln(obj.name);
}
test();
document.writeln(obj.name);
</script>
மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு var keyword ஒரு function scope specific ஆக செயல்படுகிறது. இங்கு obj என்ற variable function க்கு வெளியே ஒரு object ஆகவும் function க்கு உள்ளே ஒரு object ஆகவும் செயல்படும். எனவே இங்கு function உள்ளே obj.name variable value Linto.in எனவும் function வெளியே obj.name variable value parallel codes எனவும் இருக்கும்.
Linto.in parallel codes
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments