By creating instance of Object
Javascript இல் new keyword ஐ பயன்படுத்தி ஒரு object ஐ உருவாக்கலாம், அதேபோல் உருவாக்கிய object க்கு நாம் values ஐ assign செய்து கொள்ளலாம்.
var objectname=new Object();
Example
<script>
var website = new Object();
website.id = 1;
website.name = "Linto.in";
website.description = "Learn Javascript In Tamil";
document.write(website.id + "-" + website.name + "-" + website.description);
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு website என்ற ஒரு object new Object() என்ற முறையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.இந்த முறையில் object க்கு values ஆனது dot notation பயன்படுத்தி assign செய்யபடுகிறது. அதாவது objectname.key = value என்ற முறையில் ஒரு object க்கு properties ஆனது assign செய்யபடுகிறது. இங்கு website.id = 1, website.name = "Linto.in" மற்றும் website.description = "Learn Javascript In Tamil" என்ற வழிகளில் website என்ற object க்கு values ஆனது assign செய்யப்படுகிறது.இங்கு website object இல் இருக்கும் values ஐ array அல்லது dot notation முறையை பயன்படுத்தி access செய்து கொள்ளலாம். website.id,website.name,website.description என்ற dot notation முறையில் values ஐ access செய்கிறோம் எனவே நமக்கு output 1-parallel codes-Learn Programming in Tamil என கிடைக்கிறது output ஐ கவனிக்கவும்.
1-parallel codes-Learn Programming in Tamil
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments