indexOf() Function in Javascript

indexOf() function இங்கு ஒரு array இல் நாம் கொடுக்கும் ஒரு குறிப்பிட்ட element உள்ளதா என கண்டறிந்து அந்த element இன் index ஐ கண்டறிய indexOf() function பயன்படுகிறது. இந்த function case-sensitive முறையை பின்பற்றுகிறது.

array.indexOf(element,index)

Note: indexOf() function இங்கு இரண்டு values argument ஆக அனுபப்படுகிறது. அவைகள் முறையே ஒரு element மற்றும் index ஆகியன. இங்கு முக்கியமாக array உள்ள elements கள் முதலில் நாம் கொடுக்கும் element வருகிறதோ அந்த element இன் index output ஆக கிடைக்கும். இங்கு அந்த element இல்லை என்றால் -1 என return செய்யும்.

Example1

<script>
var data = [5,10,20,30,40];
var res = data.indexOf(40);
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example1-ஐ கவனிக்கவும் இங்கு data என்ற variable இல் [5,10,20,30,40] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு data.indexOf(40) function ஐ பயன்படுத்துகிறோம். இங்கு argument இல் 40 என்ற number ஆனது அனுபப்படுகிறது எனவே indexOf() ஆனது நமக்கு அதன் index position ஆன 4 என்பதை output ஆக கொடுக்கிறது.

Output:

4

Example2

<script>
var input = ["A","B","C","D","E","A"];
var res = input.indexOf("A",1);
document.writeln(res);
</script>

மேலே உள்ள Example2-ஐ கவனிக்கவும் இங்கு input என்ற variable இல் ["A","B","C","D","E","A"] என்ற array value save செய்யபட்டுள்ளது. இங்கு input.indexOf("A",1) function ஐ பயன்படுத்துகிறோம். இங்கு argument இல் "A" என்ற string மற்றும் index 1 என்பது அனுபப்படுகிறது எனவே indexOf() ஆனது index position 1 என்பதிலிருந்து நாம் கொடுக்கும் string element ஆனது array இல் அமைந்துள்ளதா என கண்டறிந்து நமக்கு அதன் index position ஐ கொடுக்கிறது. இங்கு நமக்கு output 5 என கிடைக்கிறது.

Output:

5

Comments