JavaScript do while loop
Javascript இல் code களை infinite எண்ணிகையில் iterate செய்வதற்கு javascript இல் while loop ஆனது பயன்படுகிறது. இங்கு முக்கியமாக ஒரு code ஆனது எவ்வளவு முறை iterate ஆக வேண்டும் என்ற எண்ணிக்கை தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல் do while loop இல் condition true அல்லது false என எப்படி இருந்தாலும் code ஆனது ஒருமுறை ஆவது execute ஆகிவிடும்.
do{ code to be executed }while (condition);
Example
<script>
var i=10;
do{
document.write(i + "<br/>");
i++;
}while (i<=15);
</script>
மேலே உள்ள Example-ஐ கவனிக்கவும் இங்கு do while loop இல் initialization value i=10 என உள்ளது. இங்கு முதலில் எந்த ஒரு condition யும் check செய்யாமல் code ஆனது execute ஆகும் எனவே முதலில் 10 என்ற value கிடைக்கிறது பின்பு இங்கு increment i++ அடுத்ததாக condition i<=15 என கொடுக்கப்பட்டுள்ளது.எனவே இங்கு condition ஐ பொருத்து அதாவது i<=15 i less than or equal to 15 என்ற condition satisfy ஆகும் வரை loop இன் உள்ளே இருக்கும் code ஆனது execute ஆகும். இங்கு loop இன் உள்ளே i என்ற value ஆனது print செய்யபடுகிறது. இங்கு முக்கியமாக increment operator உள்ளதால் ஒவ்வொரு முறை code execute ஆன பின்பும் value ஆனது increment ஆகும். எனவே நமக்கு output 10 11 12 13 14 15 கிடைக்கிறது.
10 11 12 13 14 15
இது பற்றிய தங்களின் கருத்துகளை இங்கே பதிவிடுங்கள் . இது பயனுள்ளதாக விரும்பினால் மற்றவர்களுக்கும் இதை share செய்யுங்கள்.
Comments